இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | கொரோனா காலத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தமிழகத்திற்கு பாரபட்சமானது.

சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஆர்பிஐ சுற்றறிக்கை தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்! @CMOTamilNadu

#PMModi | #EdappadiPalaniswami September 08, 2020 at 04:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்திய கடலோர காவல்படை மற்றும் இலங்கை கப்பல்களின் தீயணைப்பு முயற்சிகள் மூலம் எம்டி நியூ டைமண்டி கப்பலில் தீ கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

மேலும், வான்வழி தீயணைப்பு முயற்சிகளை அதிகரிக்க ஐ.சி.ஜி இன்று திருகோணமலை இலங்கை அதிகாரிகளிடம் 2200 கிலோ உலர் ரசாயன தூளை ஒப்படைத்தது. https://t.co/k1Q0pHNSJz September 08, 2020 at 04:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | விவசாய உதவித் திட்ட முறைகேடு விவகாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,500 போலி கணக்குகள் கண்டுபிடிப்பு

3,500க்கும் மேற்பட்ட போலி பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.59 லட்சம் பறிமுதல்

- மாவட்ட நிர்வாகம்

#PMKISANScheme September 08, 2020 at 04:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மும்பை | போதை பொருள் விவகாரத்தில் கங்கனாவுக்கு இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படும்

- மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர்

#KanganaRanaut | #AnilDeshmukh https://t.co/d48AMZqQ9L September 08, 2020 at 06:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின்படி அரியர் தேர்வு ரத்து உத்தரவு.

யூஜிசி விதிகளுக்கு முரணாக இல்லாத பட்சத்தில் அரசு முடிவெடுக்கலாம் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில். https://t.co/18Z1Y96LSW https://t.co/ARfd1njsSU September 08, 2020 at 06:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | ஆயுதப்படைக் காவலர்கள் 400  பேர் காவல் நிலைய பணிக்கு மாற்றம்

- காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் காவல் நிலையங்களில் காவலர் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக ஆயுதப்படை காவலர்கள் 400 பேரை காவல் நிலையங்களுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். September 08, 2020 at 06:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு செப். 22 முதல் 29 வரை நடைபெறும் என அறிவிப்பு. https://t.co/NTDbSCUqkC September 08, 2020 at 06:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | செப்டம்பர் 21ஆம் தேதியிலிருந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பகுதி நேரமாக பள்ளிகளை திறக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு. https://t.co/4tjFEHeveN September 08, 2020 at 08:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதிய கல்விக் கொள்கையை படிப்படியாக செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது கவலையளிக்கிறது.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் முன் கல்விக்கொள்கையை செயல்படுத்துவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது

- கனிமொழி எம்.பி @KanimozhiDMK

#Kanimozhi | #NewEducationPolicy | #NEP https://t.co/xUhG96Gx77 September 08, 2020 at 08:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கிழக்கு லடாக் பகுதியில் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) அருகே சீன படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டிய நிலையில், அந்த பகுதியில் கூர்மையான கத்திகள் இணைக்கப்பட்ட கம்புகளுடன் துப்பாக்கி ஏந்திய சீன படையினர் நிற்கும் படங்கள் வெளிவந்துள்ளன. https://t.co/AeYss7DIun September 08, 2020 at 11:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திமுக உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது

2020 இறுதிக்குள் திமுக உட்கட்சி தேர்தல் நடத்த முடிவு

அதுவரை தற்போதுள்ள நிர்வாகிகளே பொறுப்பில் நீடிப்பார்கள்

- திமுக பொதுக்குழு #DMK September 09, 2020 at 11:48AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திமுக துணைப்பொதுச்செயலாளர்களாக ஆ ராசா, பொன்முடி நியமனம்

ஏற்கனவே ஐ பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகிய 3 பேர் திமுக துணைப்பொதுச்செயலாளர்களாக இருக்கிறார்கள் #DMK September 09, 2020 at 11:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரள தங்கக் கடத்தல் வழக்கின் முக்கியமான குற்றவாளி ஸ்வ்பனா சுரேஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் https://t.co/3tDxdXQNZh https://t.co/USahEmqPgH September 09, 2020 at 11:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
காஸ் சிலிண்டர் மானியம் படிப்படியாக குறைப்பு.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதால், நுகர்வோர் அதிருப்தி அடைந்துள்ளனர். September 09, 2020 at 12:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழக காவல்துறைக்கு உலக அரங்கில் சிறப்பான பெயர் உள்ளது

நல்ல பெயருக்கு களங்கம் வர அனுமதிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

கொலை வழக்கில் விசாரணையின்போது உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து.

#TNPolice | #HighCourt https://t.co/juiQV9CF3N September 09, 2020 at 12:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விசாரணை நியாயமாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடைபெற வேண்டும்

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளது

கொலை வழக்கில் விசாரணையின்போது உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து.

#TNPolice | #HighCourt September 09, 2020 at 12:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தற்போதுள்ள அறிவியல் முன்னேற்றங்களை பயன்படுத்தி விசாரணையை மேம்படுத்த என்ன நடவடிக்கை

- நீதிபதிகள் கேள்வி

குற்றவியல் வழக்குகளில் விசாரணையை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி டி.ஜி.பி. பதில் தர உயர்நீதிமன்றம் ஆணை

#TamilNadu | #highcourt | #tnpolice September 09, 2020 at 12:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மும்பை | நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக
மாநகராட்சி அதிகாரிகள் நேற்று நோட்டீஸ் ஒட்டிய நிலையில், அலுவலக முகப்பு பகுதியை ஜேசிபி மூலம் இடிக்க தொடங்கியுள்ளனர்.

விதிகளை மீறி கங்கனாவின் அலுவலக பகுதி கட்டப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி நடவடிக்கை. https://t.co/BKto5jfXuM https://t.co/2KthwhBr84 September 09, 2020 at 12:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நடிகை கங்கனா ரனாவத்த்துக்கு y பிரிவு பாதுகாப்பு.

ஒரு லட்சம் மக்களுக்கு 138 காவலர்கள் மட்டுமே என்கிற குறைந்த விகித அளவு காவலர்கள் உள்ள இந்தியா போன்ற நாட்டில், நடிகர், நடிகைகளுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது ஆச்சர்யமளிக்கிறது

- திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா https://t.co/lH4TkJvWDF September 09, 2020 at 12:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நடிகை கங்கனா ரனாவத்த்துக்கு y பிரிவு பாதுகாப்பு.

ஒவ்வொரு லட்சம் மக்களுக்கும் 138 காவலர்கள் மட்டுமே இந்தியாவில் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய மஹுவா மொய்த்ரா, பாலிவுட் நடிகைக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பை வழங்கியதன் பின்னணியிலுள்ள காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். September 09, 2020 at 12:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மும்பை | நடிகை கங்கனா ரனாவத் இன்று ஒய் பிரிவு பாதுகாப்புடன் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய காட்சிகள். https://t.co/c0bulaYk13 September 09, 2020 at 01:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)