இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
உ.பி | விகாஸ் துபேவின் கூட்டாளி சுட்டுக்கொலை.

கான்பூரில் காவல்துறையினர் 8 பேர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபேவின் நெருங்கிய கூட்டாளி அமர் துபே உத்தரப்பிரதேச காவல்துறையின் சிறப்பு படையால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். July 08, 2020 at 08:18AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 28 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். July 08, 2020 at 09:49AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்தனர்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 4 உயிரிழந்துள்ளார். July 08, 2020 at 09:49AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் கொரொனா பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று சென்னை வருகை

மத்திய கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா, மருத்துவர் சுவரூப் சாகு, மருத்துவர் சதீஷ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர். July 08, 2020 at 11:46AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கான நடைமுறைகள் என்ன?

- தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. July 08, 2020 at 11:48AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். July 08, 2020 at 12:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஆன்லைன் வகுப்பு அல்ல.

பொதிகை, கல்வித் தொலைக்காட்சி, உட்பட 5 அரசு மற்றும் தனியார் டிவி சேனல்கள் மூலம், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிப் பாடங்கள் ஒளிபரப்பப்படும்.

மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறே கற்றுக் கொள்ளலாம்.

- அமைச்சர் செங்கோட்டையன். July 08, 2020 at 12:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | சிறுநீரக பிரச்னை கொண்ட 18 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று.

வாடிக்கையாக சிகிச்சை பெற்றுவந்த தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில், புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனை அந்த இளைஞரின் உயிரை காப்பாற்றி சாதனை.

#COVID19 | #TNFightsCorona https://t.co/cM8BarxXeZ July 08, 2020 at 12:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்குதலில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்ததாக வழக்கு

- டிஜிபி, உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்.

#sathankulampolice | #MadrasHcBench July 08, 2020 at 12:59PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனியில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

- வானிலை ஆய்வு மையம் தகவல்.

#Rain | #WeatherForecast July 08, 2020 at 01:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா நிவாரணம் வழங்க கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம் தொடர்ந்த வழக்கு?

நலவாரியங்களில் பதிவு செய்யாதவர்களுக்கும், புதுப்பிக்காதவர்களுக்கும் நிவாரணம் வழங்க வாய்ப்பு இல்லை

- சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.

#HighCourt | #TNGovt July 08, 2020 at 01:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சாத்தன்குளம் தந்தை மகன் காவல்துறை விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம்

2 வழக்குகளை பதிவு செய்து விசாரணையை துவங்கியது சிபிஐ.

#sathankulamdeath | #CBI July 08, 2020 at 01:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#CBSC | சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான புத்தகங்களில் அடிப்படை பாடங்களான மதச்சார்பின்மை, குடியுரிமை, கூட்டாட்சி போன்ற பல பாடங்கள் நீக்கம்.

இது தொடர்பாக கல்வியாளர்களால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. July 08, 2020 at 02:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து அரசாணை வெளியீடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தொடர்பு என புகார் எழுந்ததால் நடவடிக்கை.

#FriendsofPolice | #SathankulamCase July 08, 2020 at 02:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த வாரம் காணாமல் போன வாலிபர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://t.co/ANWWg18ap0 July 08, 2020 at 02:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி.

மூச்சுத்திணறலை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமது. July 08, 2020 at 02:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடர வேண்டும்.

மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சருடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தல்

வீட்டு உபயோகத்திற்கான 100 யூனிட் இலவச மின்சாரமும் தொடர்ந்து வழங்க வேண்டும்

- முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தல். https://t.co/HGabkEDf2h July 08, 2020 at 02:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்வு.

பாதிப்பு எண்ணிக்கை 1,546 ஆக அதிகரிப்பு.

#TNFightsCorona | #TNCoronaUpdate July 08, 2020 at 02:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோவை | ஒரே நாளில் கொரொனாவில் இருந்து குணம் அடைவதாக மூலிகை மைசூர்பா விற்பனை செய்த கடைக்கு சீல், கடையின் உரிமம் ரத்து.

- மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை. https://t.co/KbxSyMDXur July 08, 2020 at 03:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வாரணாசியில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் நாளை கலந்துரையாடுகிறார்
உணவு விநியோகம் மற்றும் பிற உதவிகளை செய்த இவர்களின் செயல்பாடுகளை எடுத்துரைத்து, பிரதமர் கலந்துரையாடுகிறார் https://t.co/NVUKAsntwa July 08, 2020 at 03:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் சுகாதார பணியாளர்கள் தர்மோ ஸ்கேனர் மூலம் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். https://t.co/1ElpcIYeLg July 08, 2020 at 03:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)